
| Home |
| அரிய தகவல்கள் புகைப்படங்கள் |
| இப்பகுதியில் நடிகர் திலகத்தைப் பற்றிய அரிய தகவல்கள் புகைப்படங்கள் இடம் பெறும் |
![]() |
| முன்னாள் முதல்வர் அமரர் திரு பக்தவத்சலம் அவர்கள் நடிகர் திலகம் பாரதியாராக நடிக்க வேண்டும் என்ற தன் ஆவலை வெளிப்படுத்தியிருந்தார். இதனைப் பற்றி ஆனந்த விகடன் வார இதழ், தன்னுடைய 03.08.1958 தேதியிட்ட இதழில் பிரசுரித்த கருத்துப் படத்தைத் தான் மேலே காண்கிறீர்கள். |
![]() |
| நடிகர் திலகத்தை கலாச்சார தூதுவராக அழைத்து அமெரிக்க அரசின் சார்பில், அப்போதைய சென்னை அமெரிக்க தூதரக அதிகாரி அழைப்பிதழைத் தருவதையும் அதைப் பெற்றுக் கொண்டு அதற்கு சான்றளித்து நடிகர் திலகம் ஒப்புதலளிப்பதையும் படத்தில் காண்கிறீர்கள். நன்றி, ஆனந்த விகடன் 09.07.1961. |
| நடிகர் திலகத்தின் அமெரிக்க விஜயம் |
| 1961-62ல் அரசு விருந்தினராக அமெரிக்கா சென்ற நடிகர் திலகம், பல்வேறு கலைக்கூடங்களுக்கு விஜயம் செய்தார். அவற்றில் சிலவற்றை இப்பகுதியில் தொடர்ச்சியாகப் பார்க்கலாம். |
![]() |
முதலாவதாக
- உலகப் புகழ் பெற்ற, ரேடியோ சிட்டி மியூஸிக் ஹாலில் நடிகர் திலகம்.
அக்கூடத்தின் புரொஜக்டர் பகுதியின் அப்போதைய தலைவர் பென் ஒலவ்ஸ்கி அவர்கள்,
நடிகர் திலகத்திடம், நாடக மேடை நிகழ்ச்சிகளின் விசேட நுணுக்கங்களுக்கு
சினிமாஸ்கோப் ப்ரொஜக்டரின் உபயோகம் பற்றி விளக்கிய காட்சியைத் தான் மேலே
காண்கிறீர்கள். நன்றி சினிமா கதிர் நடிகர் திலகம் அமெரிக்க விஜய சிறப்பு
மலர், 1962. |
