Home |
| Newsroom |
| |
| முகப்பிற்கு செல்ல HOME |
| |
| நடிகர் திலகம் சிவாஜி கணசன் பிறந்த நாள் நிகழ்ச்சிகள், அக்டோபர் 2009 |
|
| 01.10.2009 |
| |
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள், 01.10.2009 அன்று துவங்கின. அன்று மாலை 6.00 மணிக்கு சிவாஜி பிரபு சாரிட்டீஸ் ட்ரஸ்ட் சார்பாக சென்னை தேனாம்பேட்டை அறிஞர் அண்ணா அறிவாலய வளாகத்தில் கலைஞர் அரங்கத்தில் நடிகர் திலகத்தின் படங்களில் பணி புரிந்த கலைஞர்களைச் சிறப்பித்தல், பத்தக வெளியீடு,மற்றும் மறைந்த கலைஞர்களின் நினைவாக சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரபல பின்னணிப் பாடகர்கள் பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாடகி பி.சுசீலா, பராசக்தி படத்தின் ஒப்பனைக் கலைஞர் எல்.முத்தப்பா ஆகியோர் சிறப்பிக்கப் பெற்றனர். திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவேன் நினைவு சிறப்பு அஞ்சல் உறையினை தலைமை அஞ்சல் அதிகாரி திரு மூர்த்தி அவர்கள் வெளியிட்டார். நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பரும் உறவினருமான வேட்டைக்காரன்புதூர் முத்து மாணிக்கம் அவர்களின் நடிகர் திலகத்துடனான வேட்டை அனுபவங்களைத் தொகுத்து மரபின் மைந்தன் முத்தையா எழுதிய வேட்டைக்கு வந்த சிங்கம் என்கின்ற புத்தகம் வெளியிடப்பபட்டது. |
 |
சென்னையில் நடந்த நடிகர் திலகத்தி்ன் பிறந்த நாள் நிகழ்ச்சியில் எடுக்கப் பட்ட புகைப்படம் |
| |
| அமர்ந்திருப்போர் - இடமிருந்து வலமாக |
| |
| திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம், திரு பி.பி.ஸ்ரீனிவாஸ், திருமதி பி.சுசீலா, திரு முத்தப்பா |
| |
| நிற்போர் - இடமிருந்து வலமாக |
| |
| திரு கே.வி.பி.பூமிநாதன், தலைவர், அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம், திரு தளபதி ராம்குமார், திரு மூர்த்தி, தமிழ்நாடு தலைமை அஞ்சல் அதிகாரி, திரு முத்துமாணிக்கம், திரு பி.எஸ்.ராமன், தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், திரு ஜி.பிரபு, திரு மோகன்ராம் |
 |
| விழாவில் வெளியிடப் பட்ட திரு கே.வி.மகாதேவன் நினைவு சிறப்பு அஞ்சல் உறை |
| |
புகைப்படம் நன்றி கலாட்டா.காம். மேலும் புகைப்படங்களுக்கு கலாட்டா.காம் இணையதளத்தில் பாருங்கள். நடிகர் திலகம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் பதிவு செய்து வெளியிடும் கலாட்டா.காம் இணையதளத்திற்கு நன்றி. |
|
| TOP |
| |
| முன்னதாக 01.10.2009 அன்று மதியம் சென்னை திருமயிலை அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சமூக நல பேரவை சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பபட்டது. |
| |
| 03.10.2009 |
| |
03.10.2009 அன்று மாலை தஞ்சாவூர் தமிழரசி ஹாலில் யூ.ஏ.ஏ. குழுவினரின் திரு Y.Gee. மகேந்திரா அவர்கள் நடித்த நடிகர் திலகத்தின் காவிய நாடகமான வியட்நாம் வீடு நடைபெற்றது. |
 |
| அன்று காலை 11.00 மணியளவில் மதுரை, ரேஸ் கோர்ஸ் மைதானத்தின் அருகில் யூத் ஹாஸ்டல் வளாகத்தில் சிவாஜி பிரபு சாரிட்டீஸ் ட்ரஸ்ட், கமலா திரையரங்கு திரு வி.என்.சிதம்பரம், இதயக்கனி சினிமா ஸ்பெஷல் மாத இதழ் சார்பாக இதயக்கனி விஜயன் அமைத்த நடிகர் திலகம் சிவாஜி புகைப்படக் கண்காட்சி திறந்து வைக்கப் பட்டது. மதுரை மாநகர துணை மேயர் திரு மன்னன், திரு ராம்குமார், திரு வி.என்.சிதம்பரம், சத்யஜோதி மோட்டார்ஸ் திரு தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் திரு மதிவாணன், மாநகர காவல் ஆணையர், ஆகியோர் கலந்து கொண்டனர். கண்காட்சியினை ரசிகர்கள், பொதுமக்கள், குழந்தைகள், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் என ஏராளமானோர் கண்டு களித்தனர். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் |
| TOP |
| |
| 04.10.2009 சிலை திறப்பு விழா |
| |
| நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலை மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகில் 04.10.2009 நடைபெற்றது. சிலையை மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் திரு மு.க. அழகிரி அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திரு கமலஹாசன் தலைமை வகித்தார். மாநில அமைச்சர் திரு பரிதி இளம்வழுதி முன்னிலை வகித்தார். திரு வி.என். சிதம்பரம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மற்றும் மத்திய இணை அமைச்சர் திரு நெப்போலியன், மாநில அமைச்சர், திருமதி தமிழரசி, திரு விஜயகுமார், திரு தியாகு, திரு பி.வாசு, திரு வடிவேலு, திரு அருண் விஜய், திரு சசிகுமார், ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர் .இளைய திலகம் திரு பிரபு அவர்கள் நன்றியுரை கூறினார். லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இவ்விழா மிகச் சிறப்பாக அமைந்து மதுரை மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விட்டது. |
| TOP |
| |
| சிலை திறப்பு விழா பற்றிய செய்திகள் வெளியிட்டுள்ள பத்திரிகைகள் சிலவற்றின் இணைப்புகள் |
| இந்து நாளிதழ் |
| தினத்தந்தி நாளிதழ் |
| தினமலர் நாளிதழ் |
| தினமணி நாளிதழ் |
| |
| மற்றும் இதர இணைப்புகள் |
| கனெக்ட்.காம் இணைய தளம் |
| திரு பம்மல் ஸ்வாமிநாதனின் வலைப்பூ |
http://thangabaluslife.blogspot.com/2009/10/nadigar-thilagam-sivajis-statue.html |
| TOP |
| |
| இதர ஊர்களில் பிறந்த நாள் விழாக்கள் |
| |
| காஞ்சிபுரம் |
சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா காஞ்சிபுரம், அக்.1: காஞ்சிபுரத்தில் நடிகர் சிவாஜி கணேசன் 81-வது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் சிங்கபெருமாள் கோயில் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்றத்தினர் சிவாஜியின் படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவினர்.
மோகன் ஜுவல்லரி உரிமையாளர் டி.மோகன்லால் ஜெயின் இனிப்பு வழங்கினார் (படம்). மாவட்ட சிவாஜி மன்றத் தலைவர் பி.எஸ். சிவாஜி ஸ்ரீதர், நகர மன்ற உறுப்பினர் ரங்கராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தகப் பிரிவு மாநிலத் துணைச் செயலாளர் கு.சுப்பிரமணியம் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் காலனியில் நடைபெற்ற சிவாஜி பிறந்தநாள் விழாவில் நகர காங்கிரஸ் தலைவர் குப்பன் இனிப்பு வழங்கினார். சிவாஜி மன்ற மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, துணைச் செயலாளர் ரகுபதி, நகரத் துணைத் தலைவர் திருநாவுக்கரசு, மாவட்டத் தலைவர் மோகன்தாஸ் கலந்து கொண்டனர். |
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Chennai&artid=133099&SectionID=135&MainSectionID=135&SEO=&Title=%26%232970;%26%233007;%26%232997;%26%233006;%26%232972;%26%233007; |
| |
| TOP |
| சிவகங்கை |
சிலை: சிவகங்கை நகராட்சியிடம் சிவாஜி மன்றம் கோரிக்கை சிவகங்கை, செப்.28: சிவகங்கையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிலை நிறுவுவதற்கு நகராட்சியிடம் சிவாஜி மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட சிவாஜி மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அதில் சிவாஜி சிலை வைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்து கொடுக்கும்படியும், தொண்டி சாலையில் சிவாஜி மன்றம் இயங்கிவந்த இடத்தை அந்த மன்றத்துக்கு ஒதுக்கும்படியும் நகராட்சியிடம் சிவாஜி மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் தமிழக அரசு சார்பில் சிவாஜி மணிமண்டபம் கட்டக் கோருவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சிவாஜி மன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாவட்டத் தலைவராக கண்ணன்ரகுபதி, செயலாளராக யோகநாதன், பொருளாளராக ஜெயசீலன், சிவகங்கை நகரத் தலைவராக விஜயபாண்டியன், ஒன்றியத் தலைவராக முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். |
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Sivagangai&artid=131696&SectionID=115&MainSectionID=115&SEO=&Title=சிலை: |
| |
| TOP |
| திருநெல்வேலி |
| |
சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா
திருநெல்வேலி, அக். 2: நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாளையொட்டி, திருநெல்வேலியில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து வர்த்தக காங்கிரஸ் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சந்திப்பு காமராஜர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசன் உருவப் படத்திற்கு மாநகர் மாவட்டத் தலைவர் செ.பா. தவசிக்கனி தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் சு. செல்லப்பா, மாநகர செயலர் இந்திரசித்து, துணைச் செயலர் இரா. லட்சுமணன், மேலப்பாளையம் மண்டலத் தலைவர் எஸ்.எம். சுல்தான் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Thirunelveli&artid=133980&SectionID=139&MainSectionID=139&SEO=&Title=சிவாஜி%20கணேசன்%20%20பிறந்தநாள்%20விழா# |
| |
| TOP |
|
Various
activities of Research Institutions, Fans organisations, Academic Institutions,
Film Schools, on Nadigar Thilagam Sivaji Ganesan will be posted here.
All concerned are cordially requested to provide info along with the documentary
evidence for posting in this page. The email link given below may be used
for sending the information along with the photos, or any other related
documents. Please take care to provide authentic information. |
| |
|
நடிகர்
திலகத்திற்கு நினைவாஞ்சலி நிகழ்ச்சி சென்னை தியாகராய நகர் வாணி மகால் அரங்கில்
21 ஜூலை 2009 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக
நடிகர் திலகத்தின் காவிய படைப்பான வியட்நாம் வீடு நாடகம் யூ.ஏ.ஏ. குழுவினரால்
நடத்தப் பெற்றது. பிரெஸ்டீஜ் பத்மநாப அய்யராக திரு ஒய்.ஜி. மகேந்திரா, சாவித்திரியாக
நித்யா, பஞ்சாபி அய்யராக சுப்புணி மற்றும் இதர கலைஞர்கள் உயிரோட்டமாகவும்
நெஞ்சைத் தொடும் வகையிலும் நடித்திருந்தனர். நாடகத்தைத் தொடர்ந்து நினைவாஞ்சலி
நடைபெற்றது. இதில் தளபதி ராம்குமார், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர்
ராதாரவி, டாக்டர் எம்.என். ராஜம், மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர்
கலந்து கொண்டனர். எம்.என்.ராஜம் அவர்கள் பராசக்தி படம் வெளிவந்த பின்னும்
அந்நாடகம் நடைபெற்றதையும் ரசிகர்கள் உணர்ச்சி வசப்பட்டு வசனங்களைக் கூடவே
ஒப்புவித்ததையும் நடிகர் திலகம் வேண்டிக் கொண்ட பின் அமைதி காத்து மக்களின்
பெருத்த கரகோஷத்துடன் நாடகம் நடைபெற்றதையும் உணர்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
ராதாரவி அவர்களின் உரையும் உணர்ச்சி மேலீட்டால் அமைந்திருந்தது. இடையில்
நமது நடிகர் திலகம் இணையதளம் சார்பில் திரு ஒய்.ஜி.மகேந்திரா அவர்களுக்கு
சிவாஜி சேவா ரத்னா
என்ற பட்டம் ராம்குமார் அவர்களின் திருக்கரங்களால் வழங்கப்பட்டது.
அந்தப் படத்தைத்தான் மேலே பார்க்கின்றீர்கள். (நன்றி கலாட்டா.காம் இணையதளம்).
அதைத் தொடர்ந்து கவிப்பேரரசு வைரமுத்துவின் அஞ்சலி உரையுடன் விழா முடிவடைந்தது.
வந்திருந்த ரசிகர்கள் மற்றும் திரைத்துறைக் கலைஞர் பெருமககள் நடிகர் திலகத்தின்
நினைவுகளில் ஆழ்ந்தவாறு திரும்பினர்.
|
| |
| அருமையானதொரு
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கும், நம்முடைய இணையதளம் சார்பில் வழங்கப்பட்ட
விருதை ஏற்றுப் பெருமைப் படுத்தியதற்கும் திரு ஒய்.ஜி.மகேந்திரா அவர்களுக்கு
நமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். |
| மேலும்
படங்களுக்கு இங்கே சொடுக்கவும் |
| TOP |
| மயிலாடுதுறையில்
நடைபெற்ற நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு
அஞ்சலிக் கூட்டம் |
மயிலாடுதுறை, மகாதானத்
தெரு, அம்பாபாய் திருமண மண்டபத்தில் பெருந்தலைவர் திரு.
கு.காமராஜ் அவர்களின் 107வது பிறந்த நாள் விழாவும், நடிகர்
திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு அஞ்சலியும்
அனுஷ்டிக்கப்பட்ட கூட்டம், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட சிவாஜி
நற்பணி மன்றத் தலைவர், திரு V. சேகர் அவர்கள்
தலைமையில் 30.07.2009 அன்று காலை நடைபெற்றது. விழாவில்
சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்,
திரு கார்த்தி ப. சிதம்பரம் அவர்களும்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு P.V. ராஜேந்திரன்
அவர்களும் மற்றும் திருவாளர்கள் சரத் சந்திரன், இயக்குநர்,
இந்தியன் வங்கி, திரு மன்னை மதியழகன், அ.இ.கா.க. உறுப்பினர்,
திரு பன்னை T. சொக்கலிங்கம், மற்றும் மாவட்ட, வட்ட காங்கிரஸ்
பிரதிநிதிகள், சிவாஜி மன்ற நிர்வாகிகள், ரசிகர் மன்ற உறுப்பினர்கள்,
காங்கிரஸ் தொண்டர்கள், உள்ளிட்ட திரளான மக்கள் பங்கேற்றார்கள்.
|
| |
|
|
| |
|
|
 |
|
 |
| விழா சுவரொட்டி |
|
விழா சுவரொட்டி |
 |
|
 |
| நடிகர் திலகத்தின் திருவுருவப்
படத்திற்கு மலர் தூவி அஞ்சலி |
|
கார்த்தி சிதம்பரத்திற்கு
வரவேற்புரையாற்றும் திரு சேகர் |
 |
|
 |
| |
|
திரு ராஜேந்திரன் அவர்கள்
உரையாற்றும் காட்சி |
|
| காஞ்சிபுரம்,
ஜூலை 23: காஞ்சிபுரம் மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் நடிகர் சிவாஜி கணேசனின்
8-வது நினைவு நாள் அண்மையில் அனுசரிக்கப்பட்டது. சிங்கபெருமாள் கோயில் சன்னதி
தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் பி.எஸ்.சிவாஜி ஸ்ரீதர் தலைமை
தாங்கினார்.
நிர்வாகிகள் ஏ.ஜெயவேலு, டி.தணிகாசலம், டி.மோகன்லால் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர் ஜி.வி.மதியழகன், என்.எஸ்.சடகோபன், என்.ஆதிகேசவன், எம்.மூர்த்தி,
பி.தியாகராஜன், எம்.சடையாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவாஜி படத்துக்கு
மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. |
| courtesy: Dinamani
Paper |
| TOP |
| Golden
Jubilee Celebrations of the Release of VEERAPANDIYA KATTABOMMAN |
| 16-05-1959
- 16.05.2009 |
| |
Padmini Pictures Veerapandiya Kattabomman,
was released on 16.05.1959 and completed 50 years of its release
date on 16.05.2009. A function was held at the Russian Cultural
Centre Auditorium at 6.00 p.m. on 16.05.2009. An exhibition
on the Memorabilia was inaugurated by Thiru Stanislav
Simakov, Director, Russian Centre of Science and Culture,
Chennai. The display at the exhibition covered the evolution of
the Stage Play, its Success, evolution to the screen, the film's
phenomenal success at the box office, which also included the images
of the award given to Nadigar Thilagam as the Best Actor, B.R. Panthulu,
Padmini Pictures as the Producer, besides the Shields given to mark
the success of the film at the Box Office. The Exhibition was arranged
by Thiru V. Raghavendran, www.nadigarthilagam.com. |
| |
This
was followed by the Function in the evening. Thiru Mohan
V. Raman compered the programme.Thiru G. Ramkumar,
Sivaji Prabhu Charities Trust, welcomed the gathering and honored
the special Guests. Special Honours were made to Thiru C.R.
Parthiban, who acted as Jackson Durai in the film, Ms.
B.R. Vijayalakshmi, d/o B.R. Panthulu, the producer,
Mrs. Anuradha S.Ve. Sekhar, grand daughter of Thiru
G. Ramanathan, who got the best Music Director award, at the Afro
Asian Film Festival held at Cairo in March 1960. Thiru M.S.
Ramanujan, Post Master General, Chennai City Region, Chennai,
released the Special Day Cover. Thiru P. Thangappan,
Indo-Russian Culture and Friendship Society, briefed the various
activities of Russian Centre of Science and Culture and recalled
Nadigar Thilagam's association with the Centre. Thiru K.V.P.
Boominathan, President, All India Sivaji Ganesan Rasigar
Mandram, Thiru V.M. Lakshmi Narayanan, Chairman,
Indo Russian Chamber of Commerce and Industries, Thiru R.
Veeramani, Chairman and Managing Director, Gem Granites
and Thiru K.V.S. Maruthu Mohan, "Founder",
President of Tamils Cultural Research Foundation, who is doing his
Ph.D. on Nadigar Thilagam, spoke at the occasion. Thiru D.
Ganesan, Adco India Ltd., Chennai, read poem on Nadigar
Thilagam entitled "Eengivanai Yaam Peravae". |
| |
| Thiru
Giri Shanmugam, Sivaji Prabhu Charities Trust, gave
the Vote of Thanks. |
| |
| The
function came to a close after the National Anthem. |
| |
 |
| Thiru
Stanislav Simakov inaugurates the Exhibition |
 |
| Another
view of the Exhibition |
 |
| Thiru
G. Ramkumar brieves about the display material while Thiru V.M.
Lakshmi Narayanan looks on |
 |
| Thiru
G. Ramkumar introduces Thiru V. Raghavendran (third from right),
www.nadigarthilagam.com, who arranged the Exhibition, to the
Special Guests |
 |
| Thiru
Mohan Raman explains the previous special day
acovers released, displayed as a part of the exhibition, while
Thiru Kaa. Bharath, who was the only director to direct Nadigar
Thilagam in a Tele Serial, looks on. |
 |
| Thiru
G. Ram Kumar delivers the Welcome Address |
 |
| Sivaji-Panthulu
bondage continues - G. Ramkumar, son of Sivaji Ganesan and Ms.
B.R. Vijayalakshmi, daughter of B.R. Panthulu, continue the
legacy of their respective fathers and their bondage |
 |
| Mrs.
Anuradha S.Ve. Sekhar, grand daughter of Thiru G. Ramanathan
honoured |
 |
| Thiru
V. Raghavendran, www.nadigarthilagam.com, honoured |
 |
| Special
Day Cover released |
|
|
 |
| A
view of the Exhibition |
 |
| Thiru
G. Ramkumar brieves about the display material |
 |
| Thiru
G. Ramkumar brieves about the display material while Thiru M.S.
Ramanujan, (third from right) looks on |
 |
| Thiru
Mohan Raman explains the previous special day
acovers released, displayed as a part of the exhibition. |
 |
| Dignitaries
on the Dais |
 |
| Thiru
Stanislav Simakov honoured |
 |
| Thiru
C.R. Parthiban, who acted as Jackson Durai in the film, honoured
at the occasion. Inset - image showing Parthiban as Jackson
Durai in the film. |
 |
| Thiru
P. Thangappan, Indo-Russian Culture and Friendship Society,
honoured |
 |
| Thiru
C.R. Parthiban, addresses the gathering |
 |
| Thiru
M.S. Ramanujan, Post Master General,
speaks |
|
| |
|
|
 |
| Special
Day Cover Front |
| |
 |
| Special
Day Cover Rear |
| |
|
|
|
|
 |
| Thiru
Giri Shanmugam, Sivaji Prabhu Charities Trust, delivers the
Vote of Thanks |
|
| |
|
TOP |
| |
Home |
|
|
| |
Nadigar
Thilagam's 80th Birth Day celebrations commenced in a grand manner with
the function to release Special Day covers at Kalaignar Arangam on 1.10.2008.
A detailed write-up has been made by Mr. T. Murali Srinivas in the pages
of www.forumhub.com at the following link: |
| Write-up
by Mr. Murali Srinivas in the pages of www.forumhub.com (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=11237&postdays=0&postorder=asc&start=1215) |
| Click
for Dinamalar coverage of the function |
Dinamar
coverage Link 1
|
| Dinamalar
coverage Link 2 |
| And click for the coverage by Indiaglitz website: |
| www.indiaglitz.com
link 1 |
| Also a clipping at yahoo.com |
| www.yahoo.com
coverage |
| ROTARY
CLUB OF MADRAS MOUNT, BHARAT KALACHAR, PRIYA VISION jointly presented |
| "Nadippukku
Vayadhu 80" |
| SIVAJI
ETTHANAI SIVAJIYADI |
| celebrated
the 80th Birth Day of Nadigar Thilagam Sivaji Ganesan. |
| Our
beloved brother, Shri G. Ramkumar, gave away the Sivaji Awards of Excellence
to Smt. Vyjayanthimala Bali, Smt. B. Saroja Devi and Smt. K.R. Vijaya. |
|
| This
was followed by a Music Programme of a Variety of Immortal Sivaji Hit Songs
with Special Tribute to Director P. Madhavan. |
| |
The
function was well organised with the disciplined full house of audience
raising to the occasion and proving their class. Thunderous applause marked
each and every song. Mr. Kovai Murali aptly rendered the songs in the
voice of T.M.S., Mr. Vijay Yesudas, son of K.J. Yesudas, singing two numbers,
Ninaivaale Silai Seidhu from Andhaman Kaadhali and Aaraariro Paadiyadhaaro
from Thaaikku Oru Thaalaattu. The man stole the music show was Mr. Raja,
who rendered the song sung by the legendary A.M. Raja, Thenunnum Vandu
from the film Amara Deepam with ease. All the singers including Ms. Kalpana,
Ms. Saindhavi, and all the accompanying instrumentalists did their job
perfectly, making the evening a memorable one. And it was no wonder when
some of the audience outside when leaving the auditorium, remarked "Ivaru
programmela namakku full freedom irukkuppa. Nimmadiya, gedupidi lllama
rasigar mandra show madhiri enjoy panna mudiyudhu". |
| "What else Mr. YGeeM would have asked
for?" |
| TOP |
|
| |
| Birth Day celebrations Outside Chennai |
ON
3.10.2008, NADIGARTHILAGAM'S 80th BIRTHDAY WAS CELEBRATED IN PRAKASHNAGAR
AT 'KARNATAKA SIVAJI ARAKATTALAI' OFFICE BY ITS MEMBERS.ARAKATTALAI
LEADER MA. NATRAJ,STAGE ACTOR PALANIYAPPAN,ARTIST KANNAN AND ARAKATTALAI
MEMBERS WERE PRESENT
NOTE:
PHOTO OF THE ABOVE FUNCTION HAS COME IN BANGALORE EDITION OF THANTHI AND
DINAKARAN. |
| TOP |
| Home |