Sivaji Ganesan - Definition of Style

 

Style என்கிற வார்த்தை இடத்திற்கு இடம் Contextஐப் பொறுத்து பல்வேறு விதமான Interpretationகளில் அர்த்தம் செய்து கொள்ளப்படுகிறது. சரியாக சொன்னோமானால் BAணி என்பதைக் கொள்ளலாம். ஆனால் நடிப்பைப் பொறுத்தவரையில் நடிகர் திலகம் தனக்கென எந்த ஒரு பாணியும் கடைப்பிடிக்கவில்லை. தொலைக்காட்சிகளிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் செய்யப்படும் மிமிக்ரியில் நடிகர் திலகத்தைப் போல் செய்ய முயன்று தோல்வி கண்டவர்களே அதிகம். வெற்றி பெற்றோர் ஒருவர் கூட இல்லை என்பதே உண்மை. அதிக பட்சம் அவருடைய குரலை வேண்டுமானால் செய்திருக்கலாம்.

இவ்வாறு யாராலும் கடைப்பிடிக்க முடியாத ஸ்டைலை செய்ததினால் தான் இன்று வரை அவர் இமயமாய் உயர்ந்திருக்கிறார்.

அவருடைய உடல் மொழியில் அவர் செய்து காட்டும் ஒய்யாரங்கள் மக்களிடம் மிகப் பெரிய ஈர்ப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. அவரைப் போல் உடையலங்காரம், நடை, பார்வை கையசைவு போன்றவை அவருடைய ரசிகர்களால் இன்றளவும் பின்பற்றப்படுகின்றன. இதை மிமிக்ரி என கொச்சையாகக் கொள்ள முடியாது. அவருடைய பாதிப்பின் விளைவே இதைப் போன்ற செய்கைகளில் ரசிகர்களின் ஈடுபாடு.

இந்த உடல் மொழியில் அவருடைய ஒய்யாரங்களே மக்களிடம் சிவாஜி ஸ்டைல் என்று மிகப் பரவலாக சென்றடைந்து, கலாச்சாரத்தின் இலக்கணமாகவே மாறியுள்ளன என்றால் மிகையில்லை. இந்த அளவிற்கு தாக்கம் ஏற்படுத்திய அவரது ஒய்யாரமான உடல் மொழிகளடங்கிய காட்சிகள், குறிப்பாக பாடல் காட்சிகளைப் பற்றிய கருத்துரைகளோடு உருவாக்கி இத்தொடரில் உங்களுக்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். கீழ்க்காணும் நிழற்படத்தில் அந்தந்த எண்களில் அந்தந்த தொடரின் இணைப்புத் தரப்பட்டுள்ளது.